இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதை, அவருடைய பெயரிலேயே திரைப்படமாக உருவாக உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில், நடிகர் தனுஷ் தான் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன், பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது, இப்படத்தை எடுப்பதற்கு, தனக்கு விருப்பமான இயக்குநர்களின் பெயரை, இளையராஜாவிடம் தனுஷ் கூறியுள்ளாராம்.
அதில், மாரி செல்வராஜின் பெயரை தனுஷ் சொன்னதும், இளையராஜா மறுத்துவிட்டாராம்.
அதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விமர்சனங்களை தடுப்பதற்காக இவ்வாறு சொல்லிவிட்டாராம். இந்த தகவலை, அந்தணன் கூறியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.