தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பா.ஜ.க கூட்டணியில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகள் தடுமாறி வருகிறது.
ஓ பன்னீர் செல்வம் 3 தொகுதிகள் வரை கேட்டதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.