யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தின் முதல் பாகத்தில், நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ்.
கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த திரையுலகினர், தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.