இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி கடந்த 20ஆம் தேதி அன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.