ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற இடத்தில் 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். நபர்கள் 5 பேர் ரஷ்ய ராணுவ உடை அணிந்து கொண்டு இசை நிகழ்ச்சியின் அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது.
பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி இத்தாக்குதலை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாஸ்கோவில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனைகள். ரஷ்ய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இத்துயரமான தருணத்தில் இந்தியா துணை நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.