நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர்: பொதுமக்கள் செல்ஃபி எடுத்து உற்சாகம்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டத்தில் மாலை பிரச்சாரம் செய்ய உள்ளார்,

இந்நிலையில் தஞ்சாவூரில் தனியார் ஹோட்டலில் தங்கி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது குழந்தைகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் செல்பியும் எடுத்துக் கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக எம்பி வேட்பாளர் முரசொலி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News