ரீலில் ஜோடியாக இருந்த சூர்யாவும், ஜோதிகாவும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, ரியலிலும் ஜோடியாக மாறினர்.
இந்த ஜோடிக்கு திருமணம் ஆகி, 18 வருடங்கள் ஆகியிருந்தாலும், இருவரும் இன்றும் இளமையாகவே இருந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த இரண்டு பேருக்குமான ரசிகர்கள், இன்றளவும் குறையவில்லை.
இவ்வாறு இருக்க, சூர்யாவின் ரசிகை ஒருவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜோதிகாவை டேக் செய்து, பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், சூர்யா சாரை ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு தருகிறீர்களா?. நான் அந்த ஜெண்டில் மேனுக்கு, கடந்த 15 வருடங்களாக ரசிகையாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு ரிப்ளை செய்த ஜோதிகா, அதெல்லாம் முடியாது என்று க்யூட்டாக கூறியுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.