வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மகாலட்சுமி.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் உடலுறுப்பு தானம் செய்துள்ளதாக, அறிவித்துள்ளார்.
தனது பிறந்த நாள் அன்று, இவர் செய்துள்ள இந்த காரியம், பலரது மனங்களை வென்றுள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், மகாலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.