தேனியில் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து தினகரன் போட்டி!

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. அன்றே தமிழகத்தில் வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்களவைத் தேர்லில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை வெளியீட்டு வருகின்றது.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, அ.ம.மு.க இன்று வெளியிட்டது. அதன்படி, தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

டிடிவி தினகரன் தொடங்கிய அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்கதமிழ்ச்செல்வன் இணைந்தார்.

டிடிவி தினகரன் போட்டியிடும் தேனி தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

RELATED ARTICLES

Recent News