சென்னையில் இருந்து தெற்கு – தென்கிழக்கில் 260 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்த புயலானது 16 கிலோமீட்டர் வேகத்தில் நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இன்று நள்ளிரவில் மகாபலிபுரத்திற்கு அருகே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தின் உயரம் 20.37 அடியும், மொத்த கொள்ளளவு 2,695 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 709 கன அடியாகவும் உள்ளது. இதே போல புழல் ஏரியின் மொத்த நீர்மட்டம் 21.20 அடி. இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இந்த இரண்டு ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.