மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி இவரது மனைவி சின்னம்மாள் (55) இன்று அதிகாலை பால் கரப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தவர் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மின்சாரம் பாய்ந்து இறந்தா சின்னம்மாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News