ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜூ ஆகியோர் நடித்திருந்த ரெபல் திரைப்படம், சமீபத்தில் வெளியானது.
கேரளாவில் உள்ள தமிழர்கள் ஒடுக்கப்படுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இன்னும் இரண்டு திரைப்படங்கள், ஒரே மாதத்தில் வெளியாக உள்ளது.
அதாவது, வரும் 4-ஆம் தேதி அன்று கள்வன் என்ற திரைப்படமும், 11-ஆம் தேதி அன்று டியர் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே மாதத்தில், ஒரே ஹீரோ நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள டஜன் கணக்கிலான திரைப்படங்கள், இன்னும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.