ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது செயினை பறித்து சென்ற மர்ம நபர்..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதற்காக ரீல் ஒன்றை எடுக்க தயாரானார். அப்போது பைக்கில் விரைவாக வந்த நபர், சுஷ்மாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து விட்டு வந்த வேகத்தில் தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் தப்பியோடிய குற்றவாளியை தேடி வருவதாக இந்திராபுரம் நகர உதவி ஆணையாளர் சுதந்திர குமார் சிங் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News