ரத்தம் படத்திற்கு பிறகு, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ரோமியோ.
விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள இப்படத்தில், மிர்ணாளினி ரவி, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டிரைலரில், திருமணத்தில் விருப்பமில்லாத பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, அவரை கவருவதற்கு விஜய் ஆண்டனி மேற்கொள்ளும் சுவாரசியங்கள் தான் கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா சொல்லுங்க என்று விஜய் ஆண்டனி பேசும் வசனம் பலரையும் கவர்ந்துள்ளது.
டிரைலரை பார்த்த பலரும், படம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.