இந்திய நாட்டை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சுஃபி என்ற பெண்ணும், அமெரிக்காவில் வசித்து வந்தனர். தன்பாலின ஈர்ப்பு கொண்ட இவர்கள், பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த இந்த காதல் ஜோடி, தற்போது அதிரடியாக பிரிந்துள்ளது. அதாவது, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நேரத்தில், சுஃபி மாலிக், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் மன்னிக்க முடியாத மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன். திருமணத்திற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில், நான் அஞ்சலிக்கு துரோகம் செய்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, அஞ்சலி சக்ராவும், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், நாங்கள் எங்கள் பயணத்தை மாற்றிக் கொள்கிறோம். நாங்கள் இருவரும் எங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம்.
மேலும், சுஃபி செய்த துரோகத்தின் காரணமாக, நாங்கள் இருவரும் எங்களது உறவை முறித்துக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு போட்டோஷூட் ஒன்றின் மூலம், பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி, தற்போது பிரிந்துள்ளது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.