டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும், புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதில் சில கண்டுபிடிப்புகள், அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில், இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளன.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையை சொல்லலாம். ஒரு காலத்தில் UPI பேமெண்ட் முறைகளை பார்த்து பயந்த அனைவரும், தற்போது மிகவும் அசால்ட்டாக Money Transaction செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை எந்த அளவிற்கு பொதுமக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பதை, வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று எடுத்துக்காட்டியுள்ளது.
அதாவது, அசாம் மாநிலம் குவாத்தி என்ற பகுதியில், கண் பார்வை குறைபாடு உள்ள நபர், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையில் Phonepe QR code-ஐ வைத்துக் கொண்டு, சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்து, வைரலாக பரவி வருகிறது.