அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆயுள் தண்டனை கைதி.. போலீஸ் குவிப்பு..

உத்தரபிரதேச மாநிலம் காஷிப்பூர் பகுதியை சேர்ந்தவர் முக்தர் அன்சாரி. நிழல் உலக தாதாவாக இருந்த இவர், மௌ தொகுதியில் போட்டியிட்டு, 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார்.

ஆயுத உரிமம் பெறுவதற்காக, போலி கையெழுத்து போட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது ஆயுள் தண்டனை கைதியாக, பண்டா சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக சிறுநீர் தொற்று பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர், ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பாதுகாப்பு கருதி, பல்வேறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முக்தர் அன்சாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்த அவரது மகன் அமர் அன்சாரி, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News