‘பக்கெட்’ சின்னம் வழங்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூடாது. இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு தர வேண்டும். இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள். சின்னத்தை முடக்கும் பட்சத்தில், தனக்கு ‘பக்கெட்’ சின்னம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News