கருங்காலி மாலையை அணிந்தால், பாசிட்டிவ் எனர்ஜி நம்மை இழுக்கும் என்றும், நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் என்றும், நம்பிக்கை உள்ளது.
இந்த நம்பிக்கைகை்கு வலுசேர்க்கும் வகையில், திரை பிரபலங்கள் பலரும், இந்த மாலையை கழுத்தில் அணிந்திருந்தனர்.
குறிப்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த மாலை அணிந்த பிறகு, அது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
இதனால், பல ஆயிரம் செலவு செய்து, பொதுமக்கள் பலர் அந்த கருங்காலி மாலையை வாங்க ஆர்வம் காட்டினர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், லோகேஷ் கனகராஜிடம் கருங்காலி மாலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நண்பன் ஆசையாக கொடுத்ததால், நான் அணிந்திருக்கிறேன் என்றும், மற்றபடி கருங்காலி மாலையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.