அக்ஷய் குமார், டைகர் ஹெராப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் படே மியான் சோட் மியான். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது, நடிகர் அக்ஷய் குமார், தனது அருகில் நின்றுக் கொண்டிருந்த நடிகை ஆலயாவின் உடையை, தவறுதலாக மிதித்துள்ளார்.
இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான அந்த நடிகை, என்ன செய்வதென்று தெரியாமல், முழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.