மதுரை பெருங்குடி விமான நிலைய சாலை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகட்சி சார்பாக, டாக்டர். அம்பேத்கரின் வெண்கல சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 12.25 அடி உயரம் கொண்ட சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது, உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அமைச்சர்கள் மூர்த்தி,கேகேஎஸ்ஆர், ஐ.பெரிய சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன்,மதுரை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்!
வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.