மீண்டும் அடி வாங்கிய மும்பை இந்தியன்ஸ்: முதல் வெற்றியை பெற்றது ஐதராபாத் அணி!

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. நேற்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 80 ரன்களும், ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 34 ரன்களும், ரோகித் ஷர்மா 26 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த நமன் தீர் 14 பந்துகளில் 30 ரன்களும், ஹர்திக் பண்டியா 24 ரன்களும் எடுத்தனர். சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடியில் மிரட்டி வெற்றிக்காக போராடினர். ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் 246 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இறுதிவரை களத்தில் நின்ற டிம் டேவிட் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், ஷெப்பர்ட் 6 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களும் விளாசினர்.

RELATED ARTICLES

Recent News