பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவர் மண்ணச்ச நல்லூர் அருகே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது : கடந்த தேர்தலில் 6 லட்சம் வாக்குகள் பெற்று, 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.’ மண்ணச்சநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றேன். வரும் மக்களவை தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1,500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன்.
தி.மு.க.வுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேரும். தி.மு.க.விற்கு வாக்களித்து உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய ரெயில் பாதை கொண்டு வருவேன் என அவர் பேசியுள்ளார்.