பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், எம்.எஸ். ஷா மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகளின் செல்போனுக்கு எம்.எஸ், ஷா ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது மகளை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச்சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் வந்து தங்கினால் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பெயரில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News