இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
13-வது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வார்னர், பிரித்வி ஷா கூட்டணி 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தது.
அரைசதம் கடந்த வார்னர் 52 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜாவின் பந்துவீச்சில் பிரித்வி ஷா 43 (27) ரன்களில் அவுட் ஆக, அணித்தலைவர் ரிஷாப் பண்ட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
மேலும், மார்ஷ் 18 (12) ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் எடுக்காமலும் பத்திரனா பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். ரிஷாப் பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பத்திரனா 3 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஐடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டெல்லி கேபிட்டல்ஸின் கலீல் அகமது அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வார் (1), ரச்சின் ரவீந்திரா (2) அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டேர்ல் மிட்செல் 34 (26) ரன்களில் அவுட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 102 ஆக உயர்ந்தபோது, 30 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர் சிவம் தூபே (18), ரிஸ்வி (0) ஆட்டமிழக்க, ஜடேஜா மற்றும் தோனி வெற்றிக்காக போராடினர்.
கடைசி கட்டத்தில் தோனி சிக்ஸர்களை பறக்கவிட்டாலும், சென்னை சூப்பல் கிங்ஸ் அணி 171 ரன்களே எடுத்ததால் டெல்லி கேப்பிட்டல் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி 16 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.