தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? மீண்டும் சீண்டுகிறாரா ரஜினி?

லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22-ஆம் தேதி அன்று, வெளியாக உள்ளது.

ஆனால், ரிலீசுக்கு முன்னரே, தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான் என்று தகவல் பரவி வருகிறது. அதாவது, இப்படத்திற்கு கழுகு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

ஏற்கனவே, காக்கா – கழுகு கதை சொல்லி, விஜயை ரஜினி மறைமுகமாக சீண்டியதாக கூறப்பட்டது.

தற்போது படத்திற்கே கழுகு என்று பெயர் வைத்திருப்பது, விஜயை மீண்டும் சீண்டுவதாக உள்ளது என்று, பேச்சு எழுந்துள்ளது. எது எப்படியே, படத்தின் உண்மையான டைட்டில் என்ன என்று, வரும் 22-ஆம் தேதி தான் தெரியவரும்…,

RELATED ARTICLES

Recent News