விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டு, நூலிழையில் தப்பித்தேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருப்போம். இந்த வார்த்தைக்கு காட்சி கொடுக்கும் வகையில், சம்பவம் ஒன்று நடந்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும்போது, ஒரு திகில் திரைப்படத்தை பார்த்த அனுபவம் தான் பார்வையாளர்களுக்கு கிடைத்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் பகுதியை சேர்ந்தவர் ஷேன் ரெய்ம்சே.
இவர், தனது வீட்டின் அருகே இருந்த கடைக்கு, பொருட்களை வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென ராட்சத அளவிலான இரும்பு பிளேடு, அருகில் இருந்த கட்டுமான Site-ல் இருந்து, அவரை நோக்கி வேகமாக வந்துள்ளது.
நூலிழையில் அவர் கடையின் உள்ளே சென்றதால், பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்தார்.
இதுகுறித்து பேசிய ஷேன், “திடீரென பெரிய சத்தம் ஒன்று கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது, ஒருவர் பெரிய பள்ளத்தில் விழுவதை பார்த்தேன். அதன்பிறகு, 4 அடி அளவுள்ள ராட்சத பிளேடு, என்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்.
இந்த ராட்சத பிளேடு, கடையின் உள்ளே ஏற்படுத்திய சேதம் குறித்த விவரித்த கடையின் உரிமையாளர் அமித் க்ரீவல், “அந்த பெரிய பிளேடு 2 அடி ஆழம் வரை, சுவரில் பதிந்துவிட்டது. அதனை அங்கிருந்து வெளியே எடுக்க 3 பேர் தேவைப்பட்டனர்” என்று கூறினார்.
ராட்சத பிளேடு எப்படி அங்கு வந்தது?
டிபார்மெண்டல் ஸ்டோர் இருந்த இடத்தின் அருகில், கட்டுமான பணி நடந்துள்ளது. அப்போது, வாயு கசிவை சரி செய்வதற்கு, இந்த ராட்சத பிளேடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது, ஆபரேட்டர் செய்த தவறால், இந்த ராட்சத பிளேடு, கழண்டு விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அந்த கட்டுமான நிறுவனம், இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை, தங்களது அனைத்து Project-ல் இருந்தும் விலக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.