ஒரு நாள் நீங்கள் எழுந்திருக்கும்போது, உங்கள் தாத்தா யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷத்தை, நீங்கள் கண்டுபிடிக்கும் நேரம் நடந்தால், என்ன செய்வீர்கள்.
இதை கேட்பதற்கு மிகவும் அபூர்வமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இப்படியான அதிர்ஷ்டம், சண்டிகரில் உள்ள மருத்துவர் ஒருவருக்கு அடித்துள்ளது.
அதாவது, சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் குழந்தைகள் நல அறுசை சிகிச்சை நிபுணர் டன்மே மோதிவாலா. இவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இதுதான் பங்குகளை வைத்திருப்பதன் சக்தி. என்னுடைய தாத்தா-பாட்டி, கடந்த 1994-ஆம் ஆண்டு அன்று, எஸ்.பி.ஐ வங்கியின் ஷேர்ஷை, ரூபாய் 500-க்கு வாங்கியுள்ளனர்.
ஆனால், அதை அவர்கள் மறந்தே போய்விட்டனர். ஏன் வாங்கினோம், அந்த ஷேர் இருக்கிறதா? இல்லையா என்று கூட, அவர்களுக்கு தெரியாது. நான் எங்கள் குடும்பத்தின் பங்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, தாத்தா-பாட்டி வாங்கிய ஷேர்களை கண்டுபிடித்துவிட்டேன்.” என்று கூறியிருந்தார்.
மேலும், அவர் கண்டுபிடித்த பங்கு பத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த பங்கின் தற்போதைய மதிப்பு என்ன என்று கமெண்ட்ஸில் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
நெட்டிசன்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்ததால், அதனை இன்னொரு பதிவில் கூறியிருந்தார்.
அந்த பதிவில், “நான் கண்டுபிடித்த அந்த ஷேரின் தற்போதைய மதிப்பு என்ன என்று நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஈவுத்தொகை இல்லாமல், அந்த ஷேரின் தற்போதைய மதிப்பு, ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். இது ஒரு பெரிய பணம் கிடையாது. ஆனால், தாத்தாவும் பாட்டியும் முதலீடு செய்த பணத்தைவிட, 750 மடங்கு, 30 வருடங்களில் கிடைத்துள்ளது. இது பெரிய விஷயம் தான்.” என்று கூறியுள்ளார்.