உதவிகள் செய்வதால் பாலாவுக்கு வந்த பிரச்சனை? என்ன உலகம் இது?

சின்னத்திரையில் கலக்கி வந்த காமெடியன்களில் ஒருவர் பாலா. சினிமாவிலும் ஒருசில படங்களில் நடித்து வரும் இவர், தன்னால் முடிந்த உதவிகளை, ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் உதவிகள் செய்து வருவதால், சில பிரச்சனைகளில் சிக்கியிருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, தனது நீண்ட நாள் காதலியை, பெற்றோர்கள் சம்மதத்துடன் பாலா திருமணம் செய்ய இருப்பதாக, சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது பாலாவுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுகிறார்களாம்.

தன்னிடம் உள்ள பணத்தை, பிறரது நலனுக்காக பயன்படுத்தினால், பாலாவின் எதிர்காலம் என்ன ஆவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.

இதுமட்டுமின்றி, ஒருசில ஹீரோக்கள், பாலா தனது படத்தில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதாவது, பாலா தனது படங்களில் நடித்தாலும், அவரது பெயர் தான் பெரியதாக பேசப்படும் என்று தயக்கம் கொள்கிறார்களாம். இந்த தகவல், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News