ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று தன்னுடைய திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பது, இயக்குநர்களின் கனவாக உள்ளது.
ஆனால், ரசிகர்கள் தங்களது கவனத்தை இழுக்கும், தங்களது ரசனைக்கு ஏற்ற படங்களை மட்டுமே திரையரங்கில் சென்று பார்க்கிறார்கள். இந்நிலையில், ஹாட் ஸ்பாட் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தங்களது படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த வருகிறது என்றும், ஆனால், நாங்கள் நினைத்த அளவிற்கு திரையரங்கிற்கு கூட்டம் வரலில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், நீங்கள் எங்களுடைய திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள். அது உங்களை நிச்சயம் ஏமாற்றாது.
அப்படி திரையரங்கில் சென்று படம் பார்த்தும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், என்னை செருப்பால் கூட அடியுங்கள் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஹாட் ஸ்பாட் படத்தின் டீசரில், சர்ச்சையான விஷயங்கள் இடம்பெற்றிருந்ததால், பெரும் விமர்சனங்களை அப்படக்குழு சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.