புயல் காற்றால் காசிமேட்டில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தது. மேலும் 15க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நீரில் மூழ்கியது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலானது நேற்றிரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசியது.
புயலினால் பல இடங்களில் உண்டான பாதிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது சென்னை காசிமேடு கடற்கரையில் விசைப்படகுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 100க்கும் மேற்பட்ட படகுகள் புயலினால் உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும் 15க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.
மீனவர்கள் முன் கூட்டியே எச்சரிக்கையோடு இருந்தாலும் கூட அவர்களால் சிறிய வகை பைபர் படகுகளை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. பெரிய வகை விசைப்படகை கரைக்கு ஏற்றுவது கடினமானது என்பதால் அதனை கடலின் கரையிலேயே நிறுத்தி வைப்பார்கள். புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியா வண்ணம் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.