ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா என்ற வசனம் விஜயின் கில்லி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த வசனத்திற்கு உண்மையான எடுத்துக் காட்டு என்றால், அது ஆட்டோக்காரர்கள்.
ஆம், அவர்களுக்கு தெரியாத ஏரியாவே இருக்க முடியாது. எந்த சந்தில் நுழைந்தால், எந்த ஏரியாவுக்கு போக முடியும் என்பதை, அவர்கள் மட்டும் தான் அறிந்து வைத்திருப்பார்கள். இவ்வாறு இருக்கக் கூடிய ஆட்டோக்காரர்களுக்கு, நகைச்சுவை உணர்வும் அதிகம்.
இவர்கள், தங்களது ஆட்டோக்களில் சவாரி ஏறும் வாடிக்கையாளர்களிடம் நகைச்சுவையாக பேசி, அந்த பயணத்தையே சந்தோஷமானதாக மாற்றிவிடுவார்கள்.
இத்தகைய குணங்களை கொண்ட ஆட்டோ டிரைவர்கள், வடஇந்தியாவில் பையா ( Bhaiya ) என்று அழைக்கப்படுகிறார்கள். பையா என்றால் அண்ணா என்று தான் அர்த்தப்படுகிறது. ஆனால், சில 90-ஸ் கிட்ஸ்கள், Bhaiya என்று அழைப்பதற்கு பதில், Bhayya என்ற வார்த்தையில் தவறாக அழைத்துவிடுகிறார்கள்.
இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் ஒன்று தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், முதலில் உள்ள பையாவுக்கு தான் அண்ணன் என்று அர்த்தம். இரண்டாவதாக உள்ள வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால், உ.பி. மற்றும் பீகார் பகுதியில் உள்ள மக்களை இழிவாக குறிப்பிடுவதற்கு, வடஇந்தியாவில் இந்த வார்த்தை குறிப்பிடப்படுகிறது.
இத்தகையா இனவெறி கொண்ட வார்த்தையில் தங்களை அழைப்பதை தடுப்பதற்கு, இங்கு ஒரு ஆட்டோக்காரர் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
அதாவது, ”என்னை பையா என்று அழைக்காதீர்கள். அதற்கு பதில், ‘பாய்.. டாடா.. பாஸ்.. பிரதர்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழையுங்கள்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இனவெறி:-
இந்தியா என்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாரம்பரியத்தை கொண்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும், வேற்று மொழி பேசுவபவர்களை இழிவுப்படுத்தும் சில நபர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
மேலும், அவ்வாறு உள்ள நபர்கள், மற்ற மொழி பேசும் மக்களை, இழிவான பெயர்களை கொண்டு அழைப்பது இன்னும் நடந்துக் கொண்டு தான் உள்ளது.
தமிழகத்தில், வடமாநிலத்தவரை, வடக்கன் என்ற இழிசொல் கொண்டும், வடமாநிலத்தில் இருப்பவர்கள் தமிழர்களை, மதராஸி என்ற இழிசொல் கொண்டும் அழைக்கிறார்கள். இதேபோல், ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும், மற்ற மொழி பேசும் நபர்களை, இழிசொல் கொண்டு அழைப்பது கண்டிக்கதக்க விஷயம்..