கார் நிறுத்துமிடத்தில் 700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் கார் நிறுத்துமிடத்தில் ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் கார் நிறுத்தும் இடத்தில் சோதனை மேற்கொண்டதில் அங்கு சாக்கு மூட்டைகளில் 700 குவாட்டர் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் நடவடிக்கை எடுத்த போலீசார் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்ணன் என்பவரை கைது செய்து எதற்காக? மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் ஒரே இடத்தில் 700 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.