தலைநகர் டெல்லியின் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் தொடர்ச்சியாக, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியை நீக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், இது விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என்று சாடியிருந்தார்.
மேலும், ஏற்கனவே இந்த மனு இரண்டு முறை பரீசிலனை செய்யப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, இதனை தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வுக்கு மாற்றி, உத்தரவிட்டார்.