“ஜூனியர் மனைவி.. வேலைக்கு ஆட்கள் தேவை” – இளைஞரை சாடிய நெட்டிசன்கள்!

லிங்க்டுஇன் என்ற செயலியில், வேலை தேடுபவர்களும், வேலைக்கு ஆள் எடுப்பவர்களும், கணக்கு தொடங்கி வைத்திருப்பார்கள். தங்களுக்கு பணியாளர்கள் வேண்டும் என்ற நிலை வரும்போது, லிங்க்டுஇன் செயலியில், பதிவு வெளியிடுவார்கள்.

அதனை ஏற்றுக் கொள்ளும் ஊழியர்கள், அந்த நிறுவனத்தை நாடுவார்கள். இப்படி இருக்க, மென்பொருள் பொறியாளராக ஒருவர், இந்த செயலியில், பதிவு ஒன்றை வெளியிட்டு, வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார்.

அதாவது, மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருபவர் ஜிதேந்திர சிங். இவர் தனது லிங்க்டுஇன் கணக்கின் வாயிலாக, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜூனியர் மனைவி வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவமுள்ள பெண்கள், வேலைக்கு Apply செய்ய வேண்டாம். ஜீரோ அனுபவமுள்ள பெண்கள் தான் தேவை. வருமாணம் – ரகசியமானது. 3 ரவுண்டு இன்டர்வூயூ வைக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், ஊழியருக்கான தேவைகள் குறித்து கூறியுள்ள அவர், “ சமைப்பதில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் எழுப்பினாலும், பிரியாணி செய்து தரும் திறமை இருக்க வேண்டும். மதிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கமாக, கீழ்படியும் தன்மையுடன், காதலுடன் இருக்க வேண்டும்” என்று பல்வேறு தேவைகளை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நகைச்சுவையான பதிவு தான். மக்கள் சிரிப்பதற்காகவே இந்த பதிவு என்று நைசாக, பொறுப்புத் துறப்பு ஒன்றையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நினைத்தது போலவே, பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, பலரது கவணத்தையும் பெற்றது. ஒருசிலர், இவரது பதிவை நகைச்சுவையுடன் எடுத்துக் கொண்ட போதிலும், வேறுசிலர், இவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.

“என்ன மாதிரியான பதிவு இது. இந்த மாதிரியான பதிவுகளை, லிங்க்டுஇன் எப்படி அனுமதிக்குறாங்க. இது இன்ஸ்டாகிராமோ, பேஸ்புக்கோ கிடையாது.” – நெட்டிசன் 1

“ரியாலிட்டில இருங்க.. நீங்கள் 100 வருட பழமையான ஆள் என்பதை குறிப்பிடுவது மட்டுமின்றி, இதுமாதிரியான பதிவுகள், உங்களது வேலை தேடுதலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் பணியிடங்களில் இதேபோல் நீங்கள் நடந்துக் கொண்டால், உங்களது பணி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அல்லது, உங்கள் மீது POSH புகார் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதை நகைச்சுவையாக ஏன் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்று எல்லோரும் ஆச்சரிப்படுகிறார்கள். காரணம் ரொம்ப சாதாரணமானது. இது நகைச்சுவையான பதிவே கிடையாது” – நெட்டிசன் 2

இவ்வாறு பல்வேறு நெட்டிசன்கள், தங்களது ஆதங்கத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News