இந்தியாவின் கொடை வள்ளல்.. ரூ.170,00,00,000 நன்கொடையாக கொடுத்த பெண்.. யார் இந்த ரோஹினி நிலேகனி..?

உலகமே வியந்து பார்க்கும் அளவில், தொழில் அதிபர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள் என்று பல்வேறு பிரபலங்களை, இந்தியா கொண்டிருந்தாலும், இங்கு இன்றும் வறுமை என்று கொடிய அரக்கனின் ஆட்சி நடந்துக் கொண்டு தான் உள்ளது.

வறுமையை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்தாலும், சில தொழில் அதிபர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி, பல வருடங்களாக, பல்வேறு மாற்றங்களை செய்து வருபவர் தான் ரோஹினி நிலேகனி. இவர் யார்? இவர் என்னென் செய்துள்ளார் என்பதை, தற்போது பார்க்கலாம்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பிறந்தவர் ரோஹினி நிலேகனி. எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில், பிரெஞ்சு இலக்கியம் படித்த இவர், பிரபல ஊடகத்தில், பத்திரிகையாளராக பணியாற்றினார்.

அதன்பிறகு, தனது காதலர் நந்தன் நிலேகனி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இவர், தனது கணவர் மற்றும் 6 சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன், 1981-ஆம் ஆண்டு அன்று, இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த பணமான 10 ஆயிரத்தில், இந்த நிறுவனத்தை தொடங்கிய இவர், கடின உழைப்பின் மூலம், மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை படைத்தார். தற்போது, இவரது கணவருக்கு, 24 ஆயிரத்து 131 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

பிசினஸில் நல்ல உயரத்தை எட்டியபோதும், ஏழை மக்கள் மீது அரவணைப்புக் கொண்ட இவர், ரோஹினி நிலேகனி பிலிந்த்ரபிஸ், பிரதம் புக்ஸ், ஏக் ஸ்டெப், அர்க்கியம் போன்ற பல்வேறு லாபநோக்கம் அற்ற நிறுவனங்களை தொடங்கி, சேவையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவின் பெண் கொடை வள்ளல்களுக்கான 2023-ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில், மக்கள் நலனுக்காக, ரூபாய் 170 கோடியை நன்கொடையாக அவர் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், அவரை பாராட்டி வருகின்றனர். ரோஹினி நிலேகனி, 2022-ஆம் ஆண்டு அன்று, 120 கோடி ரூபாயை, நன்கொடையாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News