சென்னை தி.நகரில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் வாகனப்பேரணி நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாகனப்பேரணியின் போது சாலையோரங்களில் 113 அனுமதியின்றி பேனர்கள் மற்றும் 3 கட்அவுட்களை நிறுவிய பாஜகவினர் மீது சென்னை போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் . தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறாமல், பதாகைகள், போர்டுகளை அமைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.