ஐபிஎல் தொடரில் 25-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மேதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர்.
விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த படிதார்- டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் ரன்கள் உயர்ந்தின.
அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுணிடரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மஹிபால் லோம்ரோர் ரன் எதுவும் எடுக்கமால் ரக்அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளஸ்சிஸ் 61 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி சார்பில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில், 34 பந்துகளில் 69 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 38 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமாருடன் அடுத்து ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஆனால் 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் மொத்தம் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்த திலக் வர்மா ஜோடி வெற்றிக்கான இலக்கை எட்டினார்கள். இறுதியில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.