லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி வைகையாற்றில் ராட்டினம் அமைப்பதற்காக 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சம்பத்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார்கள் கைது செய்தனர்.

பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவினை யொட்டி பொதுமக்களின் மகிழ்ச்சிக்காக ராட்டிணம் சிறுவர்கள் ரயில், சர்கஸ் உள்ளிட்டவைகள் தனியார்களால் அமைக்கப்படும்.

இதில் ராட்டிணம் அமைக்க மணிகண்டன் ஊன்பவர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதிபெற்ற பிறகு பொதுபணித்துறை அதிகாரிகளை அணுகி உள்ளார். அப்போது அவர்கள் அனுமதி சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மணிகண்டன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் 30 ஆயிரத்தை மணிகண்டன் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரே கையும் களவுமாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன். உதவிப்பொறியாளர் சம்பத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News