அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு – ஏப்ரல் 15-ஆம் தேதி விசாரணை!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தலைநகர் டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் கலால் கொள்ளை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த கைது நடவடிக்கை செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக, நீதிமன்ற காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு எப்போது விசாரணை செய்யும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதுதொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அடுத்தடுத்து என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்படும்.

அவ்வாறு குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில், சஞ்சீவ் கண்ணா மற்றும் திபன்கர் டட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை விசாரிக்க உள்ளது.

RELATED ARTICLES

Recent News