“டார்ச்சர் செய்யப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையின் உள்ளே கொடுமைப்படுத்தப்படுவதற்கு பின்னால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு தான் உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பார்ப்பதற்கு, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசியது, “ மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில், அரவிந்த் கெஜ்ரிவால், சிறையின் உள்ளே, கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனஉறுதியை உடைப்பதற்காக தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.”

விதிகளின் படி, சிறையில் இருப்பவர்கள், தங்களை பார்க்க வரும் பார்வையாளர்களை, முகத்துடன் முகம் பார்த்து பேசுவதற்கு, சிறைத்துறை அனுமதிக்க வேண்டும். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலை பார்ப்பதற்கு, அவரது மனைவிக்கு அனுமதிக்க கிடைக்கப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு, சண்டை நடந்துக் கொண்டு இருக்கிறது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உரிமையை பறிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கேட்டுக் கொள்கிறேன். சர்வாதிகாரியாக இருக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கொடூரமான குற்றவாளிகள் கூட, தங்களது உறவினர்களை, நேருக்கு நேர் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், தலைநகர் டெல்லியின் முதலமைச்சராக 3 முறை தேர்வு செய்யப்பட்டவர், தனது மனைவியை சன்னல்களுக்கு நடுவே மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளார்”

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாதம் கைது செய்திருந்தனர். இதன்காரணமாக, திகார் சிறையில், நீதிமன்ற காவலில், அவர் இருந்து வருகிறார்.

RELATED ARTICLES

Recent News