நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் அவிநாசியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பரப்புரை ஆற்றி வருகிறார்.
அங்கு நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
இதையும் படிங்க : அதிமுக தொண்டர்கள் வாக்கு டிடிவி தினகரனுக்கு தான்: அண்ணாமலை!
அப்போது அவர் பேசியதாவது : கோவையில் ராகுலும் நானும் நடத்திய கூட்டம் பாகுபலி போல் பிரம்மாண்டமாக இருந்தது. சமூக நீதி என்றாலே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது. ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் காலியாகிவிட்டது.
அதிகாரத் திமிரில் உள்ள பாஜக.வை மீண்டும் விட்டால் திருப்பூரை மணிப்பூராக்கி விடுவார்கள். பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதலால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. மோடியின் பாஜக வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பா.ஜ.க.வின் டி.என்.ஏ.வில் ஊறிப் போய் உள்ளது.
எளிமையாக தொழில் தொடங்கும் பட்டியலில் 11-ல் இருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். சிறு, குறு, நடுத்தர தொழிலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.