சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள கோலாகலமாக தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் புத்தாண்டான இன்று பல்வேறு வகையான உணவுகள் மற்றும் அறுசுவை உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் விருந்து சாப்பிடுவது வழக்கம்.
மேலும் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். சென்னையில் உள்ள கோவில்களில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் குடும்பங்கள் மற்றும் புதுமண தம்பதியினார்கள் சாமி தரிசனம் செய்தனர்.