நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

சத்தம் கேட்டவுடன் வீட்டின் காவலர்கள் வெளியே வந்து பார்த்த போது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News