ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த தல தோனி: சென்னை அணி வெற்றி; ரோஹித் சதம் வீண்!

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மும்மை வான்கடே மைதானத்தில் 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ரஹானே 5 ரன்னிலும், ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ருதுராந் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பின்னர், மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார். மிச்சேல் 17 ரன்னில் ஆவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய டோனி, பாண்டியா வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா 2, ஜெரால்டு கோட்ஸீ, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட் வீத்தினர்.

பின்னர் 207 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அதிரடி ஆட்டத்துடன் ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். எனினும் மறுபுறம், இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, சூர்யகுமார் யாதவ் 0, திலக் வர்மா 5 பவுண்டரிகளுடன் 31, கேப்டன் ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 2 சிக்ஸர்களுடன் 13, ரொமேரியோ ஷெப்பர்டு 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

முடிவில் ரோஹித் 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 105, முகமது நபி ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி தரப்பில் மதீஷா பதிரானா 4, துஷர் தேஷ்பாண்டே, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

RELATED ARTICLES

Recent News