இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல்நல குறைவு காரணமாக குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், இன்று காலை முதல் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டு விட்டு குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.