அதிர்ச்சி: ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு!

கேரளத்தில் மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் பிரமுகர்களின் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.

நேற்று (ஏப்.17) முதல்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 20 இயந்திரங்களில் உள்ள 10 சின்னங்களையும் அழுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது விவிபேட் சீட்டை எடுத்து பார்த்த போது, பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால், இரண்டு வாக்குகள் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களில் இதுபோன்று பாஜகவுக்கு இரு வாக்குகள் விழுந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இயந்திரங்களை மாற்றக் கோரி புகார் அளித்துள்ளனர்.

மேலும், காங்கிரஸ் தரப்பில் மற்ற கட்சிகளின் சின்னத்தைவிட கை சின்னம் சிறியதாக இருப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News