“நான் உன்ன மீண்டும் அடிக்கணுமா?” – பெண் ஆசிரியருக்கு வகுப்பறையில் நடந்த கொடூரம்! காரணம் மாணவன்!

அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள வின்ஸ்டோன் சேலம் பகுதியில், பார்க்லேண்ட் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த பதின் பருவ மாணவன் ஒருவன், தன்னுடைய பெண் ஆசிரியரை, கடுமையாக தாக்கியுள்ளான்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், அந்த மாணவன், சாம்பல் நிற hoodie-யும், சாம்பல் நிற பேண்டையும் அணிந்துள்ளார்.

ஆரம்பத்தில், ஆபாசமாக ஆசிரியரை திட்டிய அவன், மிகவும் கடுமையான முறையில் அவரை அறைந்தான். மேலும், “ஏதாவது ஒரு முறையில் என்னை பாதிப்படைய வைக்கலாம் என்று நீ நினைக்கிறாயா?” என்று பேசினான்.

இவனது இந்த வார்த்தைகளை அமைதியாகவும், நிதானத்துடனும் ஆசிரியர் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து, “நான் உன்ன மீண்டும் அடிக்கணுமா?” என்று அவன் கேட்டான்.

அதற்கு, “என்னை மீண்டும் அடிக்க வேண்டாம்” என்று அந்த ஆசிரியர் கூறினார். அதன்பிறகு, அந்த மாணவன் மீண்டும் அடிக்கத் துவங்கினான். இருப்பினும் அமைதியாக ஆசிரியர் இருப்பதை பார்த்து கோபம் அடைந்த அவன், “**** என்ன தான் ஆச்சு உனக்கு.. நீ என்ன பண்ண போற.. இன்னும் அந்த Chair-லியே உக்கார்ந்துட்டு இருக்க” என்று கத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தை, வகுப்பறையில் இருந்த இன்னொரு மாணவன் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த மற்ற மாணவர்கள், தாக்குதல் நடத்தியவனை தடுப்பதற்கு பதிலாக, ஆசிரியரை அடிக்கும்போதெல்லாம் அவர்கள் சிரித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த மாணவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியின் பள்ளி மாவட்ட கண்காணிப்பாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த மாணவன் நடந்துக் கொண்ட விதம், பொறுத்துக் கொள்ளவே முடியாதது. ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று” என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News