அரசு பேருந்தில் பிகினியில் பயணித்த பெண்! குவியும் கண்டனம்!

பெண்களின் ஆடை சுதந்திரம் என்பது இப்போதும் விவாதத்திற்குள்ளான டாபிக்காக தான் உள்ளது.

ஒருசிலர், பெண்கள் தங்களது உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்றும், ஒருசிலர், பெண்கள் அணியும் ஆடைகள் கலாச்சாரத்தோடு பொருந்தி இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இரு வகையான கருத்துகளுக்கு மத்தியில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லி தலைநகரில் உள்ள அரசு பேருந்து, வழக்கம் போல் கூட்டத்துடன் காணப்பட்டது.

அவ்வாறு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள அந்த பேருந்தில், பிகினி ஆடை அணிந்துக் கொண்டு, இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். அந்த பெண்ணின் உடையை பார்த்த பயணிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அங்கிருந்த பயணி ஒருவர், அதனை வீடியோவாக எடுத்திருந்தார். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி, பல்வேறு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.

RELATED ARTICLES

Recent News