நிறைவடைந்தது வாக்குப் பதிவு!

தமிழ்நாடு, கேரளா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு, இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. இதேபோல், விளவங்கோடு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ளது.

6 மணிக்கு முன்பு வாக்கு செலுத்த வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டேக்கன் பெற்றவர்கள் மட்டுமே 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாக்குப்பதிவு முடிந்த மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News